நான் கோழி வளர்க்கும் கதை..... Naan Kolivalerkum Kathai...
என் பெயர் ராஜா, நான் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன். நான் இப்ப 12 கோழி வளர்த்துக்கிட்டு இருக்கேன். இந்த பிளாக்ல நான் அந்த கோழிகளை பற்றியும் கோழி வளர்ப்பு பற்றியும் பதிவிடுவேன்.
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022
வியாழன், 28 பிப்ரவரி, 2019
புதிதாக வாங்கிய கோழியை எப்படி பழகுவது
ஒன்று அல்லது இரண்டு கோழிகள் வாங்கும் பொழுது காலில் நீளமான கயிறு கட்டி அதை யதிலாவது
கட்டிவைத்து தீவனம் கொடுத்து வரவேண்டும் அவ்வாறு கட்டி வைக்கும் பொழுது இரண்டு கோழிகளும் ஒன்றுக்கொன்று சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு போதிய இடைவெளி விட்டு கட்டி வைத்தல் வேண்டும் இவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்யும் பொழுது கோழி அந்த புதிய சூழலுக்கு பழகிக் கொள்ளும் அதன் பின் நாம் அதை அவிழ்த்து விட்டு விடலாம் அது சரியாக நாம் அந்த மூன்று நாட்கள் இரவில் எங்கு அடைதோமோ அங்கு சென்று அடையின்துவிடும்...
அதிகமான கோழிகள் வாங்கி கூண்டில் அடைக்கும் பொழுது நாம் முதல் மூன்று நாட்கள் அதன் இரு கால்களையும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு கட்டிக் கொள்வது நல்லது ஏனென்றால் அது புதிய சூழலுக்கு பழகுவதற்கு முன்பு அது நம்மிடம் இருந்து தப்பிக்காமல் இருக்கும் இல்லையென்றால் நாம் கூண்டின் கதவைத் திறக்கும் பொழுது அது நம்மிடம் இருந்து தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது...!
#கோழியை புதிய சூழலுக்கு பழக்குவது
#கோழியை புதிய சூழலுக்கு பழக்குவது எப்படி
#புதிதாக வாங்கிய கோழியை பழக்குவது எப்படி
#நாட்டுக்கோழி வளர்ப்பு
#புதிதாக வாங்கிய நாட்டுக்கோழியை கையாளுவது எப்படி

கோழிகளை கையாள சிறந்த நேரம்
கோழிகளை கையாள சிறந்த நேரம் இரவு அதாவது சாயந்திரம் இருட்டிய பின்பு அல்லது அதிகாலையில். பொதுவாக இருட்டில் கோழிகளுக்கு அந்த அளவுக்கு தெளிவாக கண் தெரிவதில்லை அதனால் அந்த நேரத்தில் அது பலஹீனமாக இருக்கும் ஆதலால் நாம் எளிதாக அதை பிடித்து விடலாம் அது மட்டுமில்லாமல் அது பரைக்க உம் அங்கும் இங்கும் ஓடும் செய்யாது கூட்டிற்குள் நாம் எளிதாக அதை பிடித்து விடலாம். பயத்தில் அதிகமான சத்தம் எழுப்பும் அந்த சத்தத்தை கேட்டு மத்த கோழிகளும் சத்தமிடும் வேறு எந்த தொந்தரவும் இருக்காது அதனால் கோழிகளை கையாள சிறந்த நேரம் இரவு பொழுது, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு இரவு தான் சிறந்த பொழுது அல்லது இரவே அதை பிடித்து கட்டி வைத்துவிட்டு காலையில் நாம் எங்கே வேணாலும் கொண்டு செல்லலாம் அவ்வாறு செல்லும் போது ஒரு ஈரத்துணியால் மூடி வைத்தால் அது சத்தம் எழுப்பாமல் இருக்கும்...!
#கோழிகளை கையாள சிறந்த நேரம், #கோழிகளை இடம் மாற்ற சிறந்த நேரம், #நாட்டுக்கோழி வளர்ப்பு,
நான் 12 கோழி வாங்கிய கதை
என்னை பற்றி சிறிய அறிமுகம்:
வணக்கம் என் பெயர் ராஜா நான் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன் நானும் என் தம்பியும் ஒரு கடை நடத்திக்கிட்டு இருக்கோம். வருமானத்தை பெருக்க வேறு தொழில் பண்ணலாம்னு நெனச்சோம். அப்போ கால்நடைகள் ஏதாச்சு வளர்க்கலாம்னு முடிவு பண்ணோம்.கோழியை தேர்ந்தெடுக்க காரணம்:
ஆடு மாடு வளர்க்க அதிகமான இடமும், அதுக்கு தீவனம் தயார் பண்ண பெரிய இடமும் தேவைப்படும் ஆனால் கோழிகள் அப்படி இல்ல அதுக்கு பெரிய இடம் தேவைப்படாது சின்ன இடம் இருந்தால் போதும் அது மெய்வதேற்கு மட்டும் கொஞ்சம் வெளியில இடம் இருந்தால் போதும் கோழி வளர்க்கலாம் அது மட்டும் இல்லாம இப்போ நாட்டுக் கோழிகள் மற்றும் நாட்டுக் கோழி முட்டைகலுகும் அதிகமான தேவை இருக்கு அதனால இது ஒரு லாபகரமான தொழிலாக இருக்கும் என்று இதை பண்ணலாம்னு முடிவு பண்ணினோம்.
அருகிலிரந்த கோழி பண்ணைகள்:
எங்களுக்கு கடையை வைத்து உள்ளூரில் நல்ல பழக்கம் இருந்ததால் நாங்கள் பக்கத்தில் இருக்கும் கோழிப் பண்ணைகளை பார்த்தோம் அதில் எங்களுக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன...
நாங்கள் பார்த்த கோழி வகைகள்:
முதல் பண்ணையில் நாங்கள் ஒட்டுரக கோழிகளை பார்த்தோம் அந்தக் கோழிகள் முட்டை விடுவதற்கே என்று உருவாக்கப்பட்டவை பருவத்தை அடைந்தவுடன் தானாக முட்டையிட ஆரம்பிக்கும் அந்த கோழிகள் அடைகாப்பது இல்லை இது கிராமம் என்பதால் அந்த கோழிகளின் முட்டைகளை நாட்டுக்கோழி முட்டை என்று யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இன்னொரு பண்ணையில் வெளிமாநில கோழி ரகங்களும் வளர்க்கப்பட்டன உதாரணத்துக்கு மத்திய பிரதேச காடர் வகைகோழிகள் அதை கருப்பு கோழிகள் என்றும் கூறுகின்றனர்..
மற்றும் இன்னொரு இடத்தில் நமது நாட்டுக் கோழி குஞ்சுகளை பார்த்தோம் அது சிறியதாக இருந்ததால் சற்று வளர்ந்தவுடன் குஞ்சுகள் தருவதாக உரிமையாளர் கூறினார்..
நாட்டுக்கோழி வாங்கினோம்:
இப்படி பண்ணைகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது எங்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர் தன்னிடம் இருக்கும் 12 கோழிகளை எங்களுக்கு தருவதாக சொன்னார் இவ்வாறு நாங்கள் முதல் 12 கோழிகளை வாங்கினோம்..!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
கோழிகளை கையாள சிறந்த நேரம் இரவு அதாவது சாயந்திரம் இருட்டிய பின்பு அல்லது அதிகாலையில். பொதுவாக இருட்டில் கோழிகளுக்கு அந்த அளவுக்கு தெளிவாக க...