வியாழன், 28 பிப்ரவரி, 2019

புதிதாக வாங்கிய கோழியை எப்படி பழகுவது

ஒன்று அல்லது இரண்டு கோழிகள் வாங்கும் பொழுது  காலில் நீளமான கயிறு கட்டி அதை  யதிலாவது
கட்டிவைத்து தீவனம் கொடுத்து வரவேண்டும் அவ்வாறு கட்டி வைக்கும் பொழுது இரண்டு கோழிகளும் ஒன்றுக்கொன்று சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு போதிய இடைவெளி விட்டு கட்டி வைத்தல் வேண்டும் இவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்யும் பொழுது கோழி அந்த புதிய சூழலுக்கு பழகிக் கொள்ளும் அதன் பின் நாம் அதை அவிழ்த்து விட்டு விடலாம் அது சரியாக நாம் அந்த மூன்று நாட்கள் இரவில் எங்கு அடைதோமோ அங்கு சென்று அடையின்துவிடும்...

அதிகமான கோழிகள் வாங்கி கூண்டில் அடைக்கும் பொழுது நாம் முதல் மூன்று நாட்கள் அதன் இரு கால்களையும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு கட்டிக் கொள்வது நல்லது ஏனென்றால் அது புதிய சூழலுக்கு பழகுவதற்கு முன்பு அது நம்மிடம் இருந்து தப்பிக்காமல் இருக்கும் இல்லையென்றால் நாம் கூண்டின் கதவைத் திறக்கும் பொழுது அது நம்மிடம் இருந்து தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது...!


#கோழியை புதிய சூழலுக்கு பழக்குவது
#கோழியை புதிய சூழலுக்கு பழக்குவது எப்படி
#புதிதாக வாங்கிய கோழியை பழக்குவது எப்படி
#நாட்டுக்கோழி வளர்ப்பு
#புதிதாக வாங்கிய நாட்டுக்கோழியை கையாளுவது எப்படி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

sandaiedum sevelhal