வியாழன், 28 பிப்ரவரி, 2019

நான் 12 கோழி வாங்கிய கதை

என்னை பற்றி சிறிய அறிமுகம்:
                  வணக்கம் என் பெயர் ராஜா நான் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன் நானும் என் தம்பியும் ஒரு கடை நடத்திக்கிட்டு இருக்கோம். வருமானத்தை பெருக்க வேறு தொழில் பண்ணலாம்னு நெனச்சோம். அப்போ கால்நடைகள் ஏதாச்சு வளர்க்கலாம்னு முடிவு பண்ணோம்.

கோழியை தேர்ந்தெடுக்க காரணம்:
                    ஆடு மாடு வளர்க்க அதிகமான இடமும், அதுக்கு தீவனம் தயார் பண்ண பெரிய இடமும் தேவைப்படும் ஆனால் கோழிகள் அப்படி இல்ல அதுக்கு பெரிய இடம் தேவைப்படாது சின்ன இடம் இருந்தால் போதும் அது மெய்வதேற்கு மட்டும் கொஞ்சம் வெளியில இடம் இருந்தால் போதும் கோழி வளர்க்கலாம் அது மட்டும் இல்லாம இப்போ நாட்டுக் கோழிகள் மற்றும் நாட்டுக் கோழி முட்டைகலுகும்  அதிகமான தேவை இருக்கு அதனால இது ஒரு லாபகரமான தொழிலாக இருக்கும் என்று இதை பண்ணலாம்னு முடிவு பண்ணினோம்.

அருகிலிரந்த கோழி பண்ணைகள்:
                        எங்களுக்கு கடையை வைத்து உள்ளூரில் நல்ல பழக்கம் இருந்ததால் நாங்கள் பக்கத்தில் இருக்கும் கோழிப் பண்ணைகளை பார்த்தோம் அதில் எங்களுக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன...

நாங்கள் பார்த்த கோழி வகைகள்:
                      முதல் பண்ணையில் நாங்கள் ஒட்டுரக கோழிகளை பார்த்தோம் அந்தக் கோழிகள் முட்டை விடுவதற்கே என்று உருவாக்கப்பட்டவை பருவத்தை அடைந்தவுடன் தானாக முட்டையிட ஆரம்பிக்கும் அந்த கோழிகள் அடைகாப்பது இல்லை இது கிராமம் என்பதால் அந்த கோழிகளின் முட்டைகளை நாட்டுக்கோழி முட்டை என்று யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இன்னொரு பண்ணையில் வெளிமாநில கோழி ரகங்களும் வளர்க்கப்பட்டன உதாரணத்துக்கு மத்திய பிரதேச காடர் வகைகோழிகள் அதை கருப்பு கோழிகள் என்றும் கூறுகின்றனர்..
மற்றும் இன்னொரு இடத்தில் நமது நாட்டுக் கோழி குஞ்சுகளை பார்த்தோம் அது சிறியதாக இருந்ததால் சற்று வளர்ந்தவுடன் குஞ்சுகள் தருவதாக உரிமையாளர் கூறினார்..

நாட்டுக்கோழி வாங்கினோம்:

            இப்படி பண்ணைகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது எங்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர் தன்னிடம் இருக்கும் 12 கோழிகளை எங்களுக்கு தருவதாக சொன்னார் இவ்வாறு நாங்கள் முதல் 12 கோழிகளை வாங்கினோம்..!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

sandaiedum sevelhal